Tuesday, December 29, 2015

Facebook freebasics பற்றி மறைக்கும் தகவல்கள் என்ன?

1.இலவசமாக இணையத்தை உபயோகிக்க வேறு சில நல்ல திட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு இது மற்றும் இது

2. Free basics வழங்குவதற்கான செலவு தொலைபேசி நிறுவனங்களால் (Reliance) ஏற்கப்படுகிறது. இந்த செலவு Reliance இன் மற்ற வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு free basics ஐ ஊக்குவிப்பதால பிற இணைய திட்டங்களின் விலை குறைவதற்கு Facebook தடையாக உள்ளது.

3.free basics இன் உண்மையான நோக்கம் மக்களை இணையத்திற்கு கொண்டு வருவது அல்ல. மாறாக facebook ஐயும் அதன் பிற கூட்டாளிகளையும் இலவசமாக வழங்குவதே இதன் நோக்கமாகும். Free basics is in violation of net neutrality.

4.இணைய தொடர்பு இந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வருகின்றது.2015 இல் 10 கோடி இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டன. இந்த அதிவேக வளர்ச்சி free basics இன் துணையின்றி வந்தது இன்பது குறிப்பிடத்தக்கது.

5.free basics என்பது யாவரும் பங்கேற்கக்கூடிய திறந்த கட்டமைப்பு அல்ல. இதன் சட்டத்திட்டங்களை facebook நிறுவனம் முடிவு செய்கின்றது. Facebook நினைத்தால் எந்த தளத்தையும் இத்திட்டத்தில் இருந்து வெளியேற்ற முடியும்.

6. Free basics பற்றிய தகவல்களை facebook இடம் மட்டுமே பெறமுடியும். இதனை பயன்படுத்தி இந்நிறுவனம் பல தவறான தகவல்களை வெளியிடுகிறது. இதற்காக பிரேசில் நாட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. விளம்பரங்களில் வரும் free basics ஆனது உண்மையில் இலவசமல்ல என்பது பல பேர்களின் கருத்து.(மூலம்)

7.free basics மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட அனைத்து தளங்களின் உபயோகபாடு ,உபயாகிப்பவர்களின் விவரம் அனைத்தும் facebook இற்கு செல்லும். இத்தகைய தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு facebook முன்னமே வழங்கி உள்ளது.இம்முறை அவ்வாறு வழங்காது என்பதற்கு  என்ன உத்திரவாதம்?

8. குறைவான தளங்களை உடைய ஒரு மூடப்படட திட்டத்தை நிறைய நேரம் உபயோகிப்பதை காட்டிலும் முழு இணையத்தில் குறைவான நேரம் செலவிடுவதை மக்கள் விரும்புகின்றனர் என்பது ஓர் ஆராய்ச்சியில் முடிவானது.(மூலம்)

9. Free basics இல் விளம்பரங்கள் இருக்காது என்று facebook கூறுகிறது. ஆனால் இது எல்லா கால கட்டத்திலும் பொருந்துமா என்பது தெளிவாக இல்லை.

10. 32 லட்சம் பேர் free basics ஐ ஆதரிப்பதாக facebook தெரிவிக்கிறது. இதில் எத்தனை போலியான கணக்கு , எத்தனை பேர் உண்மை தெரியாமல் like செய்தனர் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

இப்பதிவு http://blog.savetheinternet.in/what-facebook-wont-tell-you-about-freebasics/ இல் இருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

Friday, December 18, 2015

Facebook Freebasics - பற்றி தெரிந்து கொள்வோமா?


free basics என்றால் என்ன?


free basics  என்பது facebook நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு திட்டம். இதன் மூலம் இணையத்தில்(internet) இயங்கும் சில தளங்களை (websites) மக்கள் தங்களது அலைபேசியில்(mobile phone) இலவசமாக உபயோகிக்கலாம்.

எதற்காக facebook இதனை இலவசமாக தருகிறது?

 

facebook நிருவனத்தின் வருவாய் (revenue) நம்மை போன்ற மக்கள் அவர்களிடத்தில் பார்க்கும் விளம்பரங்களால் வருகின்றது. இலவசமாக அளிக்கப்படும் இத்திட்டத்தினால் இன்னும் பலர் அவர்கள் இணையதளத்தை உபயோகம் செய்வர். இதனால்  இவ்விளம்பரங்கள் இன்னும் அதிகமாக பார்க்கப்பட்டு அவர்களுக்கு மேன்மேலும் வருவாய் அளிக்கும். இதற்காகவே facebook இத்திட்டத்தை இலவசமாக வழங்குகிறது.

இருக்கட்டும். இதனால் எனக்கு என்ன பாதிப்பு?


இத்திட்டத்தின் மூலம் நம்மை வந்தடையும் தகவல்களையும், செய்திகளையும் நிர்ணயம் செய்யும் அதிகாரம் facebook  என்னும் ஒரு அயல்நாட்டு நிறுவனத்தை சென்றடையும். நாளைடைவில் இந்நாட்டின் கொள்கைகளையும் சட்டங்களையும் இந்நிறுவனம் நினைத்தால் எளிதாக மாற்றலாம்.இதன் பாதிப்புகளை இன்றும் நாம் காணமுடியும். இம்மாதிரி திட்டங்கள் சட்ட விரோதமானவை என்று ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களில் தடை செய்யபட்டாலும் , இந்தியாவில் இத்திட்டத்திற்கு ஆதரவு திரட்ட facebook உறுப்பினர்களுக்கு தானே வடிவமைத்த ஒரு செய்தி பதிவை அனுப்பி அதனை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைக்கின்றது.

அப்படியா? இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேறு ஏதும் தகவல் உள்ளதா?


இது போன்ற இலவசமாக இணையத்தை அடைய வழிசெய்யும் திட்டங்களும், இவற்றை சார்ந்த இன்னும் சில திட்டங்களும் இணையம்(internet) என்னும் அமைப்பிற்கு பாதகம் விளைவிப்பவை. இன்றைய இணையமானது (internet ) யாருடைய கட்டுப்பாட்டிலும் வராமல் சுதந்திரமாக உள்ளது. இணையத்தில் பல கோடி ரூபாய் வருமானமுள்ள google நிறுவனத்தின் தளமும் (www.google.com ), ஆயிரம் ரூபாய் கொடுத்து நீங்கள் நடத்தும் தளமும் (www.yoursite.com ) சமமாக நடத்தபடுகின்றன. இக்கொள்கையானது net neutrality என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது பொறுக்காத சில நிறுவனங்கள் அவரவர் அளிக்கும் பணத்திற்கேற்ப தளங்களை பாரபட்சமாக நடத்தும் ஆற்றல் வேண்டி சில சூழ்ச்சிகள் செய்து வருகின்றன . facebook இன் free basics நல்ல திட்டமாக தோன்றினாலும் நாளடைவில் இணையத்தின் சுதந்திரத்தையே பாதிக்க கூடும். எனவே கவனமாக இருக்கவும்!!